134                     இலக
136       

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


                       

     ‘அஇஉ எவொடு கசட தபவாம்

     ஒன்பதும் தேவர் கதியாம், ஆஈ

     ஊஏ ஙஞண நமவாம் ஒன்பதும்

     மாந்தர்கதி....... நல்லன.             

  - மு. வீ. யா. ஒ. 75

                                                     38

 

விலங்கின்கதியும் நரகர்கதியும்

 

799. ஒ ஓ  ய ர ல  ழ ற எனும் ஏழும்

    தொக்க விலங்கின் சூழ்கதி, ஏனைய

    நரகர் கதிஇவை நவைஎனப் புகல்வர்.

 

இது விலக்கப்படும் கதிஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: ஒகரமும் ஓகாரமும் யகர ரகர லகர ழகர றகரமும் ஆகிய
ஏழ் எழுத்தும் பலவாகிய விலங்கின் கதியைக் கூறும் எழுத்துக்களாம்;
ஒழிந்த ஐகார ஒளகாரமும் வகர ளகர னகரமும் என்னும் ஐந்து
எழுத்துக்களும் நரகர் கதிக்கு ஓதிய எழுத்துக்களாம். இவ்விருகதியையும்
குற்றமுடைய கதியென முதல் மொழிக்கு ஆகா என்று கூறுவர் புலவர்
என்றவாறு.

 

     தொக்க என்ற மிகையானே எடுத்த மங்கலச் சொல்லின் முதல்
எழுத்தாமாயின் குற்றமுடைய அல்ல என்றவாறு.                

(39)


விளக்கம்

 

     விலங்கின் கதிக்கு உரிய எழுத்துக்கள் - ஒ ஓ ய ர ல ழ ற என்பன.
 

     நரகர் கதிக்குரிய எழுத்துக்கள் - ஐ ஒள வ ள ன என்பன.
 

     இவற்றுள் ழகர றகர ளகர னகர உயிர்மெய்கள் ஒருவாற்றானும்

 மொழிக்கு முதலாகா. ய க ர ர க ர உயிர்மெய்கள்