பாட்டியல் - நூற்பா எண் 38

135


              

     

‘தேவர் மக்கள் நரகர் விலங்கென

     மேவிய நான்கே எழுத்தியல் கதியே.’            

- 21

 

அவற்றுள்,

 

     ‘உயிர்க்குறில் வல்லினம் ஈற்றெழுத்து ஒழியப்

     பயிர்ப்புறு வானவர் கதிஎனப் படுமே.’            

 - 22

 

     ‘தேவர் கதியே தெரியுங் காலை

     அஇ உஎ கசட தபவே.’                            

- 23

 

     ‘மக்கட் கதியே நெட்டுயிர் நான்கொடு

     மிக்க சிறப்பின் ஙஞண நமவே.’                 

 - 24

 

அவைதாம்,

 

     ‘ஆஈ ஊஏ ஙஞண நமக்கள்

     மேவிய மக்கள் கதிஎன விளம்புவர்.’                  

- 25

 

     ‘மன்னுவ தேவர் மக்கள் செய்யுளுள்.’            

 - 28

    

‘தேவரும் மக்களும் மேவின பாட்டே.’           

- 30

 

     ‘வேண்டும் குறில்வன்மை ஈறொழித்தால் விண்ணோர்க்காம்

     ஆண்ட நெடில்முதல்நான்(கு) அந்தமொழித்(து) - ஈண்டிய

     மென்மையாம் மக்கட்(கு) இவை இரண்டும் மெய்க்கதிக்கு

     நன்மையா முன்மொழிக்கு நாட்டு.’     

 - வெண். பாட். 19

 

     ‘வல்லினம் குற்றெழுத்து ஈறுஇன்றியே வரின்வானோர்கதி

          மெல்லினம் ஈறுஇன்றியே மேவும் நெடில்முதல்

                                      நான்கும் வந்தால்

     சொல்லுவர் மக்கள் கதி.’                  

 - நவ. 20

    

          ‘குறில்வன்மை ஈறுஒழிக்கில் வானோர்க் காகும்

     நேர்நெடிலின் முதல்நான்கு ஈறில்லா மென்மை

          நிலமக்கள் கதிமுதல் சீர்க்கு ஆகும்.’     

- சிதம். பாட். 24

 

     ‘கதியின் பொருத்த விதியைக் கூறின்

     ஒவ்வொழி குறிலே றவ்வொழி வலியே

     செவ்வி தாகும் தேவர் கதியே;

     னவ்வொழி மெலியே நெடில்முதல் நான்கும்

     வவ்வில் அஃதாகும் மக்கள் கதியே.’             

- தொ. வி. 293