New Page 1
பாட்டியல் - நூற்பா எண் 39

137


                                  

    உயிர்க்குற்றெழுத்து ஒன்றனைச் சார்ந்தே மொழிமுதலாகும். எனவே
தெளிவாக மொழிமுதலாவன ஐ ஒ ஓ ஒள வ என்பனவே. இவை
மங்கலச்சொல்லின் முதலெழுத்து ஆதல் ஐயை, ஒண்கதிர், ஓங்கல், ஒளடதம்,
வாரிதி (திரு, திங்கள், மலை, அமுதம், கடல்) முதலியவற்றில் காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘ஒழிந்த ஐ ஒள ஆய்த எழுத்தும்

     கழிந்த வளனவும் நரகர் கதியே.’                            

- பன். பாட். 26

 

     ‘ஒ ஓ இரண்டும் ய ர ல  ற ழ எனத்

     தொக்கன ஐந்தும் விலங்கின் கதியே.’                            

  ’’    27

 

     ‘மன்னா விலங்கொடு நரகர் கதியே.’                             

  ’’    28

 

     ‘விலங்கும் நரகும் விலங்கின என்ப.’                              

 ’’    29

 

     ‘தேவரும் மக்களும் மேவின பாட்டே.’                            

 ’’    30

 

     ‘நாட்டிய ஒ ஓ  ய ர ல ழ நல்வன்மைக்(கு)

     ஈட்டிய அந்தம் இவை விலங்காம் - காட்டா(து)

     ஒழித்த நரகர்க்கென் (று) ஓதினார் இன்ன

     எழுத்தாகா ஆதி இடை.’                                

- வெண். பாட். 20

 

     ‘பன்னொன்று பத்துயிர் யம்முதல்மூன்று பன்னேழ்பதினைந்து

     என்னும் இவையே விலங்கின்கதி, இயம்பாஎழுத்துத்

     தன்னை நரகர்கதி என்றுசாற்றுவர்; தாம்உணர்ந்தோர்

     முன்னை மொழிக்கண் வரத்தகாது என்று மொழிவர்களே.’

                                                                 

 - நவ. 21

 

     ‘ஒ ஓ, ஏர்மருவு யரலழற விலங்காம்; மற்றை

     எழுத்துநர கக்கதி,முன் இவைவா ராதால்.’

                                                           

 - சித. பாட். 24

 

    ‘ஒ ஓ ய  ர ல ழ றவும் விலங்கின் கதியே;

    னவள ஐ ஒளவும் நரகர் கதியே.’                             

- தொ. வி. 293

 

    ‘ஒ ஓ ய  ர ல ழ ற

    விலங்கின் கதிஐ ஒளவொடு வளன

    ஐந்தும் நரகர் கதியாம் ... தீயன.’                          

- மு. வீ. யா. ஒ. 75

                                                                        39