New Page 1
பாட்டியல் - நூற்பா எண் 40

 139


   

     ‘நேரசை ஆகவும் நிரைஅசை ஆகவும்;

      சீர்பெற எடுத்தல் சில்லிடத் துளவே’

 

என்றார் இந்திரகாளியர். இவை சிறப்பின்மையின் ஈண்டுத் தொக்கினார் எனக்கொள்க.

 

     ஓதிய என்ற மிகையானே கணநாள் பொருத்தமும் கொள்க. அவையாமாறு;

 

     ‘வருண கணமே சதயம் என்ப,

     சந்திர கணமே மிருக சீரிடம்,

     அந்தர கணமே புனர்பூச மாகும்,

     வாயு கணமே சோதி ஆகும்,

     சூரிய கணமே பூசம் என்ப,

     தீக்கணம் தானே கார்த்திகை என்ப,

     யமான கணமே பரணி என்ப,

     பூமி கணமே கேட்டை ஆகும்.’

 

     எனக் கணநாள் கூறி,

 

     ‘நிலையே, செல்வம், சூலை, நலன்நீக்கல்,

     கொலை, பிணி, நன்மை, இன்பம் கூறே.’

 

என  இந்திரகாளியர் பலமும் கூறியவாறு அறிந்து கொள்க.

(40)

 

விளக்கம்

 

     கணப்பொருத்தம் மூவசைச்சீர்க்கே சிறப்பாகக் கொள்ளப்படும்.

 

 சீர் 

 

 கணம் 

 

 நாள்   

  

பயன்

 

கூவிளங்கனி

-

நீர்க்கணம்  

-

சதயம் 

-

சீர்சிறப்பு.   

புளிமாங்கனி 

-

தீக்கணம் 

-

கார்த்திகை 

-

நோய்.

கருவிளங்காய்

-

ஆகாயகணம

-

புனர்பூசம்

-

வாழ்நாள்நீக்கம்.