New Page 1
140

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

   சீர்  

 

   கணம் 

  

  நாள் 

 

   பயன்

 

தேமாங்காய் 

- தேமாங்காய் 

- பரணி 

- பெருக்கம்.

புளிமாங்காய் 

- சந்திரகணம் 

- மிருகசீரிடம

- வாழ்நாள்தருதல்.

கூவிளங்காய

- சூரியகணம்   

- பூசம்   

- வீரியம்போக்கல்.

கருவிளங்கனி  

- பூகணம் 

- கேட்டை  

- செல்வம்.

 

  கணங்களுக்குச் சீர், நாள், பயன் என்பன இவ்வாறு கொள்ளப்பட்டுள்ளன.

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘ஈரசைச் சீரே மூவசைச் சீரே

     நாலசைச் சீரே ஓரசைச் சீர்எனச்

     சீர்வகை நான்கும் தெரிந்தனர் புலவர்.’

’’

பன். பாட்.98

     ‘ஈரசை அகவல், மூவசை நான்கும்

     நேர்இறில் வெள்ளை, நிரைஇறில் வஞ்சி,   

     நாலசை பொது, மற்று ஓரசைச் சீரே.’

’’

99

     ‘மூவசை எண்சீர் கணம்என மொழிந்தனர்

     ஈரசை நாலசை ஓரசை ஒழித்தே.’    

’’

100

     ‘கணமே மூவசைக் கூட்ட மாகும்.’   

’’

101

     ‘முற்பாட்டு எடுப்பின் முதல்ஈர் அசைச்சொல்

     சொற்பால் மங்கலச் சொல்லொடு தோன்றி

     நிற்பினும் கொள்ளார் நெறிஉணர்ந் தோரே.’

’’

102

    ‘நன்மைசெய் கடவுள் நாடின் அவற்றிற்குத்

     தொன்னெறி மரபின் இன்மை யானே

     நாலசைச் சீரும் மேலோர் ஒழித்தனர்.’

’’

103

    ‘நீடுஇய மானன், திங்கள், நிலம், நீர்,

     சூரியன், வானம், அங்கி, காற்று, என

     இயம்பினர் தெய்வ நலம்பெறு புலவர்.’

 

’’

104