பாட்டியல் -
நூற்பா எண் 40 |
141 |
‘நேரசை மூன்றுஇய மானன், அதற்குச்
சீர்புனை நாளே பரணி, வாழ்நாள்
மற்றுஅது பயக்கும்என்று உய்த்துஉரைத் தனரே.’
- 105
‘நிரைநேர் நேர்நீள் மதியம், அதற்கு
வருநாள் மகசிரம், மலிபுகழ்ஆகும்.’
- 106
‘நிரைஅசை மூன்றும் நிலக்கணம், அதற்குத்
தருநாள் கேட்டை, திருமிகத் தருமே.’
- 107
‘நீர்க்கணம் நேர்நிரை நிரை, நாள் சதயம்,
பார்க்கதிர்ப் பெருக்கம் பார்க்கும் என்ப.’
- 108
‘கண்ணிய நேர்நிரை நேர்வரின் நெடுங்கதிர்,
நண்ணிய நோய்தரும், நாள்புனர் பூசம்.’
- 109
‘நிரைநிரை நேர்தாம் வரின்அது வானம்
பெருகிய கேடுஅது தரும், நாள் ஓணம்.’
- 110
‘நெருப்பின் கணம்நிரை நேர்நிரை, கார்த்திகை
விருப்புறு நாள், அது இடுக்கண் செய்யும்.’
- 111
‘காட்டிய நேர்நேர் நிரைவரின் காற்று,அது
நாட்டுஅறை போக்கும், நாள்சோதிஆகும்.’
- 112
‘நிற்பன தீக்கணம் நான்குஅவை நீக்கி,
நற்கணம் நான்குஅவை நாட்டினர் கொளலே.’
- 113
‘நீரே நிலனே வானே நீள்மதி
சீர்இய மானன் செந்தீத் தெறுகதிர்
காற்றுஎனக் கிளர்ந்த கூற்றன என்ப.’
- 114
‘அவைதாம்,
நேர்முதல் ஆகிய நிரைஇணை பின்வரின்
|