142 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘முதல்நிரை ஆகி இணைநேர் வழிவரின்
அதுமதிக் கணம்என்று அறிந்தனர் கொளலே.’
- 118
‘நேர்அசை மூன்றுஇய மானன் கணமே.’
- 119
‘நேர்நடு வாகி நிரைஇரு பாலும்
சேரு மாயின் செந்தீக் கணமே.’
- 120
‘நிரைநடு வாகி நேர்இரு பால்வரின்
அலர்கதிர்க் கணம்என்று அறிந்தனர் கொளலே.’
- 121
‘ஈறுநிரை ஆகி இணைநேர் முன்வரின்
மாறி வந்த மாருத கணமே.’
- 122
‘நிலனும் மதியும் நீரும்இய மானனும்
நலம்மிகும் முதல்வரின்; பிறநான் கும்பகை.’
- 123
‘யாவர்செய் யுட்கும் இனமொடு புணரும்
மூவசைச் சீரே முதல்நிற் பனவே.’
- 124
‘அவைதாம்,
பெருக்கம் செய்தலின், வாழ்நாள் பயத்தலின்,
தருக்கிய சீர்த்தி தன்னைத் தருதலின்,
மிகுதிரு ஆக்கலின், வேந்தர்க்கும் பிறர்க்கும்
தகும்எனப் பகரினும், தகாதுமற்(று) அச்சீர்க்கு
உரிய நாளொடு செய்யுள் செய்யுள்
பொருபடைக் குரிசில்நாள் பொருந்தாக் கடையே.’
- 125
‘அவைதாம்,
தேயம் போக்குதல், செல்வத்து விளிதல்,
சூனியம் ஆதல், சுழல்நோய் உறுதல்,
ஊனம் பயக்கும்என்று உரைத்தனர் ஆயினும்
ஆதி அமுதெழுத்து ஆகிய சீர்கட்கு
ஓதிய தெய்வத் திற்குரித் தாக
ஓதிய நாளொடு, பாடப் படுமே.’
- 126
‘எல்லாக் கணமும் நாள்நலம் இலஎனின்
பொல்லாங்கு தரும்எனப் புகல வேண்டும்.’
- 127
|