பாட்டியல் -
நூற்பா எண் 40 |
143 |
‘மங்கலம் அமைந்த
சொல்லொடு பொருந்திய
நிலனும் நீரும் நிலவிய
மதியும்
இயமானனும் நல்ல
வகுக்குங் காலே.’
- பன். பாட்.
‘ஏனை நான்கும்
ஊனம் பயக்கும்.’
’’
‘சந்திரன் தீஎல்
அந்தரம் அதனொடு
பூமி தேவிஎனப்
புகலும் ........
நிரைநேர் நிரைப்பின்
நேர்நிரை நிரைவரும்
ஒருநால் சீரும் ஒத்தமுறை
உடைமையின்
மற்றக் கடவுட்கு
வன்முறை யாகப்
பெற்றிடற்கு உரிய
சீரும் பெறுமே.’
‘எண்வகைச் சீரும்
இயலும்அச் சீருள்
வருணன் நாளே சதயம்
பெறுமே;
இயமானன் நாளே
பரணி ஆகும்;
சந்திரன் நாளே
மகசிரம் ஆகும்;
தண்பூமி தேவிநாள்
கேட்டை ஆகும்;
எஞ்சிய சீர்கள்
இரண்ட னுள்ளும்
வஞ்சமில் மாருத நாளே
சோதி;
எரிநாள் கார்த்திகை,
அந்தர கணத்திற்கு
உரிய நாள்அது ஓணம்
ஆகும்.’
‘சூரியன் நாளே
புனர்பூ சம்மே;’
‘நீர்க்கணம் முதல்நேர்,
நேர்ஈறு அந்தரம்,
பார்க்கணம் முந்நிரை,
பால்மதி நிரைமுதல்,
இயம்பினர் வரும்என
நயம்பெறு முன்னோர்.’
‘நிரைநடு வாம்எரி;
நேர்நடு வாம்கதிர்;
பின்நிரை காற்று;முன்
நிரைஇய மானன்,
நயம்பெறு கணம்என
இயம்பினர் புலவர்.’
‘நலனும் தீமையும்
நாடுங் காலை,
நிலனே திருவாம்,
நீரே பெருக்கம்,
மதியம் சீர்த்தி,
இயமானன் வாழ்நாள்,
வாயுநாடு அகற்றல்,
வான்தீ விளிதல்,
நோயிடைக் குறுகல்
சூரிய கணமே.’
|