New Page 1
144     

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


                            

     ‘வானின் கணமே சூரிய கணமே

     வாயுக் கணமே தீயின் கணமே

     சூனியம் ஆம்எனத் துணிந்தனர் கொளலே.’

 

     ‘காவலன் நாளொடு கணத்தின் நன்னாள்

     மேவப் புணர்த்தல் மெய்ந்நெறி வழக்கே.’

 

     ‘நிலைபெறு கணத்தின் முதல்நிலை எழுத்தே

     தலைவன் நாளொடு தாஅன் இருவகைப்

     பெயர்முதல் எழுத்தொடு கொள்ளும் பெற்றித்

     தான வகைய தா, பால் கணம்கதி

     ஊனம் இன்றி ஒற்றுமை பற்றிய

     உயிர்மெய் வல்லெழுத்து ஆக்கிச் செயிர்தீர்

     வேற்றுமை ஆகா விதியின் மாறி

     நஞ்செனப் படாஅ அமிழ்தெனத் தோன்றி

     எஞ்சிய இலக்கணம் எல்லாம் உடைத்தாய்

     ஏதம் தீர்ந்த இயல்பின என்ப.’

 

     ‘ஆதி இடைஇறுதி முற்றும்நேர் ஆம்நிரைஎன்(று)

     ஓதுவர்நீர் தீமாகம் ஒண்சுவர்க்கம் - தீதிலோர்

     சொற்றார் மதிபரிதி கால்நிலம்மா நீர்மதியும்

     முற்றாகி யாம்முன் மொழிக்கு.’                        

     - வெண். பாட். 21

 

     ‘முன்மொழி ஆகலான் மூவசைச்சீர் அல்லன

     நன்மைசால் தெய்வம் நவிலாமை - முன்மொழிக்(கு)

     ஈட்டிய தொன்மை இலக்கணங்கள் இவ்வகையே

     காட்டும் அகலக் கவிக்கு.’                                      

 ’’    22

 

     ‘நேரசைமூன்று இயமானன், நிரைப்பின்பு நேர்இரண்டு

     சேர்வனதிங்கள், நிரைஅசை மூன்றும் செழுநிலமாம்,

     நேரசைப்பின்னர் நிரைஇரண் டாய்வரின் நீர்க்கணமாம்;

     தேர்இயல் அல்குல் திருவே! இதுநல்ல சீர்க்கணமே.’

                                                                 - நவ. 22