146 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
மங்கலச் சொற்குச் சிறப்புவிதி
801. தானமும் நாளும் கணமும் தவறா;
ஊனமுற் றிடின்அடை உறுதலும் உறுங்கால்
பரியா யச்சொல் பகர்தலும் மங்கலக்கு
உரியமற் றதுநடு உறும்இறு தியினும்.
இது மங்கலச்சொற்கு ஒரோவழி வேண்டும் சிறப்புவிதி கூறுகின்றது.
இ - ள்: தானப்பொருத்தமும் நாள்பொருத்தமும் கணப்பொருத்தமும்
குற்றம்வரல் ஆகா; தலைவன்
இயற்பெயரைக் குறித்து மங்கலச்சொற்குக்
குற்றப்பாடு உளதாயின் அம் மங்கலச்சொற்கு அடை
கொடுத்துக் கூறுதலும்
பரியாயச்சொல் கூறுதலும் உரியனவாம் அம்மங்கலச்சொல் முதற்கண் அன்றி
நடுவிலும் இறுதியிலும் நிற்கவும்பெறும் என்றவாறு.
மங்கலத்திற்கு என்பது மங்கலக்கு என விகாரப்பட்டு நின்றது.
ஆகுபெயரான் மங்கலச்சொல்லை
மங்கலம் என்றார்.
இங்ஙனம் இவ்வாறு கூறுதலானும் மேற் கூறப்பட்டதனாலும்
மங்கலத்தைக் குறித்துச்
சொற்பொருத்தமும் உண்டிப்பொருத்தமும் எழுத்துப்
பொருத்தமும் வேறுபடினும் அமையும் எனவும், தானத்தினையும்
நாளினையும் கணத்தினையும் குறித்து மங்கலச்சொல் வேறுபடினும் அமையும்
எனவும்
கொள்க.
(41)
|