பாட்டியல் -
நூற்பா எண் 41 |
147 |
விளக்கம்
முதல் பொருத்தமாகிய மங்கலப்பொருத்தம், சொல், எழுத்து, உண்டி
என்ற பொருத்தங்களினும் சிறந்தது; ஆதலின் மங்கலப் பொருத்தம் சிறந்து
இருப்பின் சொல் எழுத்து உண்டிப் பொருத்தங்கள் ஏற்றன அல்லவாயினும்
கவலையில்லை. ஆனால் மங்கலப் பொருத்தத்தினும் தானம் நாள்
கணப்பொருத்தங்கள் சிறப்புடையன; அவற்றின் பொருத்தம் நோக்கி
மங்கலச்சொல்லை அடைகொடுத்துச் சீரின் இடையும் இறுதியும் ஆக்கியும்,
இன்றேல் மங்கலச் சொல்லின் பரியாயப் பெயர் கூறி மாற்றியும் அமைத்தல்
வேண்டும் என்பது.
ஒத்த நூற்பாக்கள்
‘நிலைபெறு கணத்தின்.....................இயல்பின என்ப.’
- பன். பாட்.
‘ஆவதுமங் கலத்துஏற்ற பரியா யச்சொல்
அடைகொடுத்து முதற்சீருக்கு அடுத்த செய்யுள்
மேவுதலை இடைகடைமங் கலச்சொல் வைத்து
விதிஎழுத்துப் பால்வருணம் மயங்கும் என்ப;
வாவும்ஒரு நற்கதியால் முன்னோர் நூலின்
மங்கலத்தால் நஞ்சுசில அமுத மாகும்;
தூஅமுதம் எனின்கதியில் பழுதுபோ மேல்
தொடர்கலப்பாம்; மரபினது தொடக்கம் சொல்வாம்.’
- சிதம். பாட். 27
41
இயற்சீரின் கணம்
802. நேர்ஈற்று இயற்சீர் வெண்சீர் முன்னும்
நிரைஈற்று இயற்சீர் கனிச்சீர்ப் பின்னும்
தேருங் காலைச் சிறப்புறும்; அவையே,
அயன்திரு கோ-கரு டன்கணம் என்னப்
பயின்றிடும் இயற்சீர்ப் பரிசுஉரைத் திடவே.
|