New Page 1
பாட்டியல் - நூற்பா எண் 42

 149


 

அசைகள்

 

 வாய்பாடு  

 

  ஒப்பன 

 

  கணம்  

 

 தெய்வம்

 

நேர்நேர்

- தேமா

- தேமாங்காய் 

- சுவர்க்கம்

- பிரமன்.

நிரைநேர் 

- புளிமா  

- புளிமாங்காய் 

- சந்திரன் 

- இலக்குமி.

நிரைநிரை

- கருவிளம

- கருவிளங்கனி

- நிலம்

- சுரபி.

நேர்நிரை

- கூவிளம்

- கூவிளங்கனி  

- நீர் 

- கருடன்.

     

    மூவசைச்சீர்க் கணங்களுக்குக் கூறிய பயனே, ஒத்தனவாகக் கொள்ளப்படும்
 ஈரசைச்சீர்க் கணங்களுக்கும் கொள்ளப்படும்.

 

ஒத்த நூற்பாக்கள்

 

‘ஈரசை நான்கினுள் நேர்ஈறு ஒழித்து

நிரைஈற்று இயற்சீர் முதற்கண் நிற்பினும்

வரையார் மூவசை வாராக் காலே.’   

 

-பன். பாட். 128

‘ஈரசை முதலா நேர்ஈறு ஒழித்து

நிரைஈற்று மங்கலம் புணர்த்தனர் கொளலே.’

 

      ’’   129

‘நிரைநிரை கொற்றவை நேர்நிரை சாத்தன்.’       

 

      ’’   130

‘அவைதாம்,

 மிகுதரு திருவும் புகழும் செய்யும்.’      

 

      ’’   131

‘ஓரசைச் சீரும் நாலசைச் சீரும்

 ஈரசைச் சீரும் நேர்இறு சீரும்

 மங்கலம் புணரினும் மங்குதல் செய்யும்.’       

 

      ’’   132

 ‘ஈரசை முதல வானோ ரேனும்

 நேர்நேர் நிரைநேர் ஒழிந்து நிரைஇறு

 மங்கலம் புணர வந்தன கொளலே.’        

 

      ’’  

 ‘நிறுத்துகணம் இவ்விரண்டாம் அகவற் சீரின்

     நேர்ஈறு வெள்ளைச்சீர் நிரைவஞ் சிச்சீர்

 

     

 சிறப்புடைய இவ்விரண்டும் ஆம்; கணப் பேர், மற்றும்
     திகழ்இயற்சீர் அயன்திரு கோ கருடன் முன்னாம்.’

 

    -சித. பாட். 26

                                                                 42