New Page 1

பாட்டியல் - நூற்பா எண் 43, 44

151


‘பேரின்ப வெள்ளப் பெருக்காறும்.’ - ஆறு


‘ஐந்தொழிலும்ஓவாது தனித்துயர்ந்த

வான்கொடியும்.’ - கொடி


‘பேசுந் தசாங்கமெனப் பெற்றோனே.’ - முதலியவற்றைக்

காண்க. கந்தர் கலிவெண்பா (64 - 74)


‘மன்னு தசாங்கம் ஒருசீரதனுள் உரைப்பதன்றிப்

பின்நின்ற சீரொடு சேர்ந்தே பிளவுபடின் பிழையாம்

இன்னும் அவைதாம் புணர்மொழிஆயின் இயல்புபெறும்.’

- நவ. 24

43

அகலக்கவிக்குப் புறனடை

804. கூறிய இலக்கணம் குறைபா டின்றித்

தேறிய மூவசைச் சீர்முத லாக

அகலக் கவிதான் அமையும் என்ப.

இஃது அகலக்கவிக்கு ஆவது ஒரு புறனடை கூறுகின்றது.

இ - ள்: கூறப்பட்ட பத்துவகைப் பொருத்த இலக்கணத்தில்
குறைவின்றிப் பலவாற்றானும் தெளிந்த மூவசைச்சீர் முதலாக அகலக்கவி பாடப்படும் என்றவாறு

தேறிய என்றதனால் உண்டியின் விலக்கிய நச்சு எழுத்தும் கதியின்
விலக்கிய எழுத்தும் எடுத்த மங்கலச்சொல்லில் வரின் அமுதமாய் அமைவு
உடைத்து எனவும் கொள்க. அவை முறையே சீர் சொல் யானை எனவும்,
எழுத்து பொன் கார் சொல் அமிர்தம் எனவும் வருவன.

இன்னும் அதனானே மங்கலத்திற்கு அடைகொடுத்த அடைசொல்லின்
முதல் நின்ற எழுத்தே பற்றி எழுத்திலக்கணம் கொள்க.