152                      இலக

152                   

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

    இவ்வாறு கூறிய இலக்கணங்களால் போந்த பொருள் மங்கலமும்
சொல்லும் சொல்நோக்கியும், கணம் சீர் நோக்கியும், பால்முதலிய ஏழும்
எழுத்து நோக்கியும் கூறினார் என்பது.
 

     இத்துணையும் அகலக்கவி முதற்சீர்க்கு வேண்டும் பொருத்த
இலக்கணம் கூறி, இனி அகலக்கவி இலக்கணம் கூறுகின்றார்.   

(44)

 

தொடர்நிலைச் செய்யுள் வகைப் பெயர்

 

805. பிள்ளைக் கவி1மேல் கொள்ளும் கலம்பகம்2

    பன்மணி மாலை3 மும்மணிக் கோவை4

    அகப்பொருட் கோவை5 தொகைப்படு செய்யுள்6

    இணைமணி மாலை7 இரட்டைமணி மாலை8

    மும்மணி மாலை9 நான்மணி மாலை10

    இருபா இருபஃது11 ஒருபா ஒருபஃது12

    ஒலிஅந் தாதி13 மலிபுகழ் இன்னிசை14

    வருக்க மாலை15 திருத்தகு கைக்கிளை16

    மங்கல வள்ளை17 மற்றை இரட்டை18

    நற்கீர்த்தி நேரிசை19 மெய்க்கீர்த்தி மாலை20

    காப்பு மாலை21 வேனில் மாலை22

    பல்சந்த மாலை23 அங்க மாலை24

    வசந்த மாலை25 நவமணி மாலை26

    பரணி27 தசாங்கப் பத்து28இரு பகுதிய

    பதிற்றந் தாதி29,30 நூற்றந் தாதி31

    அட்ட மங்கலம்32 அலங்கார பஞ்சகம்33

    ஊசல்34 சின்னப் பூ35ஒரு பொருள்மேல்

    பேசும் சதகம்36 பிறஎண் ணாலும்

    கூறுதல்37 ஐந்திணைக் கோவை38 உற்ற

    நாழிகை வெண்பா39 நானாற் பதனோடு40-3