154 இலக

154

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

உயர்வருக்கம் பெருமகிழ்ச்சி நூறொடு பதிற்று

    ஒலியலந்தாதி தூதோடு

உலவு அலங்கார பஞ்சகமும் வாயுறை வாழ்த்து

    உலா வளமடல் கைக்கிளை

ஊர்பெயர்கொள் நேரிசையோடு இன்னிசை குறத்தியொடு

    உழத்திப் பாட்டுக் குழமகன்

பாதாதிகேச வரலாற்றுச் செருக்களம்

    படுவஞ்சி பெருமங்கலம்

பதிகமும் செவியறி வுறூஉவொடு ஊர்கடிகைவெண்

    பா அட்டமங்கலமும் நாற்

பதுசதகம் எழுகூற்றிருக்கை சின்னப்பூ ஒரு

    பாஒருபது இருபாஇரு

பது தசாங்கப் பத்துநயனப் பயோதரப்

    பத்து தசாங்கத்தயல்

காதும் ஆற்றுப்படை விருத்தலக்கணம் ஊசல்

    காப்பியம் இரண்டு பவனிக்

காதல்வா தோரணம் வெற்றிக்கரந்தை மஞ்சரி

    கலம்பகம் விளக்கு

கண்படை புறம்கையறு துயிலெடை கடையெனும்

    கருதுநிலை ஆறொடும்முது

காஞ்சிமங்கல வெள்ளை தாண்டகம் இரண்டொடு

    கண்டபுறநிலை வாழ்த்துக்களே.’                   - பி. தீ. 4

 

பிள்ளைத்தமிழின் பருவங்கள்

 

806. கடுங்கொலை நீக்கிக் கடவுள் காப்புச்

    செங்கீரை தால்சப் பாணி முத்தம்

    வாரானை முதல வகுத்திடும் அம்புலி

    சிறுபறை சிற்றில் சிறுதேர் என்னப்

    பெறுமுறை ஆண்பால் பிள்ளைப் பாட்டே.

 

இது பிள்ளைக் கவிக்கு இலக்கணம் கூறுகின்றது.