பாட்டியல் - நூற்பா எண் 46, 47
|
155 |
இ - ள்: கடிய கொலைத்தொழிலை அகற்றி அருள் நீர்மை தோன்றக்
கடவுளைப் புகழ்ந்து கூறி அக்கடவுள் காக்க எனக் கூறும் காப்பு முதலாகச்
சிறுதேர் ஈறாக முறையான் வகுத்த பத்து நிலமும் பெறும் ஆண்பாற்
பிள்ளைக்கவி என்றவாறு.
செங்கீரை தலைஎடுத்து முகம் அசைத்தல். சிறுபறை முழக்கலையும்
சிற்றில் சிதைத்தலையும், சிறுதேர் உருட்டலையும், சிறுபறை சிற்றில் சிறுதேர்
என்றார், பெயரொடு தொழிற்கு ஒற்றுமையான்.
(46)
விளக்கம்
சப்பாணி - சக பாணி, கைகொட்டுதல்.
தால் - தாலாட்டிக் குழந்தையை உறங்கச்செய்தல்.
வாரானை - ஆனை தொழிற்பெயர் விகுதி. வருதல் என்பது
பொருள். குழந்தையை வருக என்று
அழைத்தல்.
அம்புலி - இப்பருவத்தில் குழந்தை அம்புலியோடு
விளையாடுதலை விரும்புதலால் அம்புலியைக்
குழந்தையிடம் வருமாறு சாம தான பேத
தண்டங்களால் வசப்படுத்தி அழைத்தல்
இதுவே பிள்ளைத்தமிழில் மிகச் சிறந்த
பருவம் என்பர்.
46
பெண்பால் பிள்ளைத்தமிழும்
பிள்ளைத்தமிழ்ப் பாடல்
வகையும்
807. அவற்றுள்,
பின்னைய மூன்றும் பேதையர்க்கு ஆகா;
ஆடும் கழங்குஅம் மானை ஊசல்;
|