New Page 1

156 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

    

    பாடும் கவியால் பகுத்து வகுப்புடன்

    அகவல் விருத்தத் தாற்கிளை அளவாம்.

 

இது பெண்பால் பிள்ளைக்கவிக்கு எய்தியதன்மேல் சில வேறுபாடும், பொது
இலக்கணமும் கூறுகின்றது.

 

     இ - ள்: அப்பருவம் பத்தனுள்ளும் பிற்கூறப்படும் சிறுபறை
முழக்கலும் சிற்றில் சிதைத்தலும் சிறுதேர் உருட்டலும் பெண்பாற்கு ஆகா;
கழங்கு அம்மானை ஊசல் பாடுங் கவிகளால் பாடப்பட்டு வகுப்பானும்
அகவல் விருத்தத்தானும் சுற்றமுறப் பாடப்படும் என்றவாறு.      
 

  (47)

 

விளக்கம்

 

     கழங்கு அம்மானை ஊசல் என்பன எல்லாப் பெண்பாற்
பிள்ளைத்தமிழ்களிலும் தவறாது இடம்பெறுதல் இல்லை. அம்மானை நீராடல்
ஊசல் என்ற அமைப்புடைய பருவங்களும் உள.
 

     பிள்ளைத்தமிழ் சந்தவிருத்தத்தாலும் ஆசிரிய விருத்தத்தாலும்
பாடப்படும் என்பது.                             
 

 47

காப்புப்பருவக் கடவுளர்

 

808. மங்கலம் பொலியும் செங்கண் மாலே

    சங்கு சக்கரம் தரித்த லானும்

    காவற் கடவுள் ஆக லானும்

    பூவினள் புணர்த லானும்முற் கூறி,

    கங்கையும் பிறையும் கடுக்கையும் புனைஉமை

    பங்கனென்று இறைவனைப் பகர்ந்து, முறையே

    முழுதுஉலகு ஈன்ற பழுதுஅறும் இமையப்

    பருப்பதச் செல்வியை விருப்புற உரைத்து,