New Page 1

158

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

அனைவோர் என்றதனால் காரி முதலிய தேவரையும், பிள்ளையைப்
பாதுகாத்தற் பொருட்டுக் காப்புக் கூறுக என்றவாறு.
 

     இரட்டுற மொழிந்ததனால், ‘பூப்புனை ஊர்தியில் பொலிவோர் என்றது
பிரயோக விபாகத்தான் இருவரையும் கொள்ளக் கிடந்த தொடர்மொழி.  
 

(48)

 

(குறிப்பு:- இம்முறையிலும் சில மாறுபாடுகள் உண்டு.)

 

பிள்ளைத் தமிழ் கொள்ளும் காலம்

 

809. மூன்று முதல்மூ வேழு திங்களின்

    ஒற்றை பெற்ற முற்றுறு மதியின்

    கொள்ளுக பிள்ளைக் கவியைக் கூர்ந்தே.

 

இது பிள்ளைக்கவி கொள்ளும் காலம் கூறுகின்றது.
 

     இ - ள்: பிறந்து மூன்றாம் திங்கள்முதல் இருபத்தொரு திங்கள்காறும்
ஒற்றித்த திங்களில் நிறைமதிப் பக்கத்தில் பிள்ளைக்கவியை விரும்பிக்
கொள்ளுக என்றவாறு.         

 (49)

விளக்கம்

 

     பிள்ளைத்தமிழ் குழந்தையைப் பற்றிப் பாடும் நூல் ஆதலின்
பிள்ளைப்பருவம் கழியும் முன்னரே பாடுதல் வேண்டும் என்ற கருத்தான்
21ஆம் திங்களுக்குள் பாடுதல் வேண்டும் என்று கொண்டனர்.
முதியோர்களைப் பிள்ளைகளாகக் கற்பனை செய்து பாடும் இடத்தும் இப்
பிள்ளைப்பருவத்தினராகவே கொண்டு பாடுவர் என்பது. ஒற்றைத் திங்கள்
மங்கலம் தருவது. நிறைமதிப்பக்கம் வளர்ச்சிதருவது. ஆதலின் ஒற்றை
பெற்றமுற்றுறு மதி கொள்ளப்பட்டது.

49