பாட்டியல் - நூற்பா எண்
50, 51 |
159 |
காலத்துக்குப் புறனடை
810. மூன்றுஐந்து ஏழாம் ஆண்டினும் ஆகும்.
இது மேலதற்கு ஒரு புறனடை.
இ - ள்: மூன்றாம் ஆண்டினும் ஐந்தாம் ஆண்டினும் ஏழாம்
ஆண்டினும் அப்பிள்ளைக் கவியைக் கொள்ளவும் பெறும்
என்றவாறு. (50)
விளக்கம்
மூன்றுதிங்கள் முதல்
இருபத்தொரு திங்களுக்குள் பாடுதலே சிறப்பு.
அஃது இயலாதவிடத்து மூன்று, ஐந்து, ஏழ் என்ற ஒற்றை பெற்ற
ஆண்டினைக் கொள்க என்பது.
50
காப்புப் பருவம்
811. ஒன்பது பதினொன்று என்பது காப்பே.
இது பாடும் வரையறை கூறுகின்றது.
இ - ள்: பிள்ளைக்கவியைப் பாடுங்கால் ஒன்பது பாட்டானும்
பதினொரு பாட்டானும் காப்புப்பாடுக என்றவாறு.
நிலங்கள் பத்தும் தம்மில் ஒப்பக்கொண்டு பாடும்இடத்து ஒற்றைபடப்
பாடுதல் சிறப்புடைத்து. இரட்டிக்கப் பாடும் இடத்தும் ஓசை பெயர்த்துப்
பாடுக.
உரையிற்கோடலான் காப்பு முதற்கண் எடுத்த அகவல் விருத்தம்
நான்கு அடிக்கும் எழுத்து ஒப்பப் பாடுதல் வேண்டும் எனக் கொள்க.
‘முதற்கண் எடுத்த அகவல் விருத்தம்
எழுத்தின் தொகுதி எண்ணினர் கொளலே’ - பன். பாட். 191
என்ப ஆகலின். (51)
|