160
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
|
ஒத்த நூற்பாக்கள்
இனி, பிள்ளைத்தமிழ்
பற்றிய ஏனைய நூல்களின் நூற்பாக்களைக் காண்போம்.
‘பிள்ளைப் பாட்டே
தெள்ளிதின் கிளப்பின்
மூன்று முதலா மூவேழ்
அளவும்
ஆன்ற திங்களின்
அறைகுவர் நிலையே.’
- பன். பாட். 174
‘ஒன்றுமுதல் ஐயாண்டு
ஓதினும் வரையார்.’
-
175
‘தோற்றம் முதல்யாண்டு
ஈரெட்டு அளவும்
ஆற்றல் சான்ற ஆண்பாற்கு
உரிய.’
- 176
‘காப்புமுதல் ஆகிய
யாப்புவகை எல்லாம்
பூப்புநிகழ் வளவும்
பெண்பாற்கு உரிய.’
- 177
‘தொன்னில வேந்தர்
சுடர்முடி சூடிய
பின்னர்ப் பெறாஅர்
பிள்ளைப் பாட்டே.’
- 178
‘காப்பொடு செங்கீரை
தால்சப் பாணி
யாப்புறு முத்தம்
வருகஎன் றல்முதல்
அம்புலி சிற்றில்
சிறுபறை சிறுதேர்
நம்பிய மற்றவை
சுற்றத் தளவென
விளம்பினர் தெய்வ
நலம்பெறு புலவர்.’
- 179
‘தந்தை தாயே பாட்டன்
பாட்டி
முந்துற உரைத்தல்
முறைமை என்ப.’
- 180
‘திருந்திய பெண்மகவு
ஆயின் விரும்பிய
பின்னர் மூன்றும்
மன்னுநீக்கு என்றனர்.’
- 181
‘சிற்றில் சிறுதேர்
சிறுபறை ஒழித்து
மற்றவை மகளிர்க்கு
வைப்ப தாகும்.’
-
182
‘சிற்றில் இழைத்தல்
சிறுசோறு ஆக்கல்
பொற்பமர் குழமகன்
புனைமணி ஊசல்
யாண்டுஈ ராறுஅதில்
எழில்காம நோன்பொடு
வேண்டுதல் தான்உள
விளம்பினர் புலவர்.’
- 183
|