பாட்டியல் - நூற்பா எண்
51 |
161 |
‘திருமால் அரனே திசைமுகன்
கரிமுகன்
பொருவேல் முருகன்
பரிதி வடுகன்
எழுவர் மங்கையர்
இந்திரன் சாத்தன்
நிதியவன் நீலி
பதினொரு மூவர்
திருமகள் நாமகள்
திகழ்மதி என்ப
மருவிய காப்பினுள்
வருங்கட வுளரே.’
- பன். பாட். 184
‘காப்பின்முதல்
எடுக்கும் கடவுள் தானே
பூக்கமழ் துழாய்முடி
புனைந்தோன் ஆகும்.’
- 185
‘அவன்தான்,
காவல் கிழவன் ஆக
லானும்,
பூவின் கிழத்தியைப்
புணர்த லானும்,
முடியும் கடகமும்
மொய்பூந் தாரும்
குழையும் நூலும்
குருமணிப் பூணும்
அணியும் செம்மல்
ஆக லானும்,
முன்னுற மொழிதற்கு
உரியன் என்ப.’
- 186
‘விரிசடைக்
கடவுளும் வேய்த்தோள் எழுவரும்
அருளொடு காக்கஎன்று
அறையுங் காலைக்
கொலையும் கொடுமையும்
கூறார் ஆகிப்
பெயரும் சின்னமும்
பிறவும் தோன்றக்
கங்கை திங்கள்
கடுக்கை மாலை
மங்கல மழுவொடு
மலைமகள் என்றிவை
விளங்கக் கூறல்
விளம்பிய மரபே.’
- 187
‘ஒன்பது பதினொன்று
என்பது காப்பே.’
- 188
‘அகவல் விருத்தமும்
கட்டளை ஒலியும்
கலியின் விருத்தமும்
கவின்பெறு பாவே.’
- 189
‘பிள்ளைப் பாட்டே
நெடுவெண் பாட்டுஎனத்
தெள்ளிதின் செப்பும்
புலவரும் உளரே.’
- 190
‘முதற்கண் எடுக்கும்
அகவல் விருத்தம்
எழுத்தின் பகுதி எண்ணினர்
கொளலே.’
- 191
|