162 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
‘நீள்நெறி உவகை ஆண்மக விற்குஏழ்
ஐம்மூ வாண்டே அவர்முதல் சாற்றல்.’
- பன். பாட்.
‘பொங்குகதிர் இளம்பிறை புலியின் சிறுபறழ்
குஞ்சரக் குழவி கோள்அரிக் குருளை
அடல்இள விடையே ஆறிரண்டு ஆண்டின்
இடைநிகழ் உவமை என்மனார் புலவர்.’
- 193
‘பெண்மக விற்குப் பேசு மிடத்து
மானின் கன்று மயிலின் பிள்ளை
தேனின் இன்பம் தெள்ளாத் தேறல்
கரும்பின் இளமுளை கல்லாக் கிள்ளை
இளந்தளிர் வல்லி என்றுஇவை எல்லாம்
பெய்வளை மகளிர்க்கு எய்திய உவமை.’
- 194
‘இளங்கதிர்த் திங்கள் எல்லார்க்கும் உரித்தே.’
- 195
‘அவைதாம்,
பிள்ளையைப் பாடலின் பிள்ளைப் பாட்டாய்ப்
பிறப்பே ஓகை காப்பே வளர்ச்சி
அச்சம் உறுத்த லுடன்செங் கீரை
தால்சப் பாணி முத்தம்வா ரானை
அம்புலி சிற்றில் குழமகன் ஊசல்
என்றனர் பிறவும் தொன்னெறி மரபின்
தத்தம் தொழிற்குத் தகுவன புகறல்
எத்திறத் தோர்க்கும் உரிய என்ப,
கொச்சகக் கலியொடு நெடுவெண் பாட்டே.’
- 196
‘நெடுவெண் பாட்டின் முந்நான்கு இறவாது,
தொழிலொடு குறித்துத் தோன்றும் செய்யுள்,
ஒன்றுமூன்று ஐந்தேழ் ஒன்பான் பதினொன்று
என்றிவை இவற்றின் இகந்தன இழுக்கே.’
- 197
‘பிறப்பே ஓகை பேணுறு வளர்ச்சி
சிறைப்பட அச்சம் உறுத்தலொடு நான்கும்
ஆரா யுங்கால் ஐந்துமூன்று இடையாய்,
ஓர்ஏழு ஒருபொருட்கு உயர்ச்சிஇழிபு ஒன்றே.’
- 198
|