பாட்டியல் - நூற்பா எண் 51

 163


 

 

     ‘கண்டுரைக்கின் பிள்ளைக் கவிதெய்வம் காக்கவெனக்

     கொண்டுரைக்கும் தேவர் கொலைஅகற்றி - ஒண்டொடியாய்

     சுற்றத் தளவா வகுப்பொடு தொல்விருத்தம்

     முற்றுவித்தல் நூலின் முறை.’

                                       - வெண். பாட். செ.6  

     ‘முறைதருமூன்று ஆதிமூ வேழீறாம் திங்கள்

     அறைகநிலம் பத்தும்ஆண்(டு) ஐந்தேழ் -

                                    இறைவளையார்க்கு,

     அந்தம் சிறுபறையே, ஆதியாம் மூன்றொழித்துத்

     தந்தநிலம் ஓரேழும் சாற்று.’                  

                        - வெண். பாட். செ. 7

     ‘சாற்றரிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி

     மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய

     அம்புலியே ஆய்ந்த சிறுபறையே சிற்றிலே

     பம்புசிறு தேரோடும் பத்து.’                  

- வெண். பாட். செ. 8

 

    ‘விரிசடைப் பிஞ்ஞகன் வேய்த்தோள்எழுவர் முன்காக்கஎன

     அருள்பெறக்கூறின் அவரவர் செய்யும் கொலைஅகற்றி

     உரியநற் கங்கை உமையாள் மதியூர்விடை கடுக்கை

     விரைமலர்த் தார்மற்றும் மங்கலமாக விளம்புவரே.’

- நவ. 26

    ‘பதினொரு மூவரும் பங்கயத் தோனும் பகவதியும்

     நிதிமுதலோனும் பரிதியும் சாத்தனும் நீள்அமரர்க்கு

     அதிபதிதானும் அறுமுகன் ஐங்கரத்து அற்புதனும்

     மதிபுனைவேணி வடுகனும் காவல்செய் வானவரே.’

- நவ. 27

     ‘முன்தந்த காப்புச் செங்கீரை தால்சப்பாணி முத்தத்தொடு

     மற்றுஅந்த வாரானை அம்புலி வாய்ந்த சிறுபறையே

     சிற்றில் சிதைத்தல் சிறுதேர் உருட்டுதல் சேர்ந்தபத்தும்

     சுற்றத்தளவு கவிக்கு எல்லையாய்க்கொண்டு

                                             சொல்லுவரே.’

- நவ. 28