166
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
முறையே அகவல்
விருத்தத் தாலே
பப்பத் தாகப்
பாடுவது ஆண்பால்
பிள்ளைக் கவி ;
இவ் வுறுப்பினில் கடைமூன்று
ஒழித்துக் கழங்குஅம்
மனையூசல் என்றிவை
கூட்டிமுற் கூறிய வாறுஉரைப்
பதுவே
பெண்பால்
பிள்ளைக் கவிஎனப் படுமே.’
- மு. வீ. யா. ஒ. 78
51
கலம்பகம்
812. ஒருபோகு வெண்பாக்
கலித்துறை உறமுன்
வருபுயம் மதங்குஅம்
மானை காலம்
சம்பிர தம்கார்
தவம்குறம் மறம்பாண்
களிசித்து இரங்கல்
கைக்கிளை தூது
வண்டு தழைமேல்
கொண்டுஎழும் ஊசல்
மடக்கு மருட்பா
வஞ்சி விருத்தம்
வஞ்சி வஞ்சித்துறை
வெண்டுறை மருவி
இடைஇடை வெண்பாக்
கலித்துறை நடைபெற்று
அந்தாதி மண்டலித்து
ஆம்கலம் பகமே.
இது நிறுத்தமுறையானே கலம்பகம்
ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: ஒருபோகும் வெண்பாவும் கலித்துறையும் முதற்கவி உறுப்பாக
முற்கூறப்பட்டுக் கலவையின் புய வகுப்பு முதல் ஊசல் ஈறாகிய பதினெட்டுப்
பொருட் கூற்று உறுப்புக்களும் இயையுமாறு பிற்கூறப்பட்டு, மடக்கும்
மருட்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் வஞ்சிப்பாவும் ஆசிரிய
விருத்தமும் கலி விருத்தமும் கலித்தாழிசையும் வஞ்சி விருத்தமும்
வஞ்சித்துறையும் வெண்துறையும் ஆகிய கவிக்கூறுகளும் உடைத்தாய்
|