பாட்டியல் - நூற்பா எண்
52 |
169 |
ஒத்த நூற்பாக்கள்
‘சொல்லிய கலம்பகம் சொல்லில் ஒருபோகு
முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே
அம்மனை ஊசல் யமகம் களிமறம்
சித்துக் காலம் மதங்கி வண்டே
கொண்டல் மருள்சம் பிரதம் வெண்டுறை
தவசு வஞ்சித் துறையே இன்னிசை
குறமே அகவல் விருத்தம் எனவரும்
செய்யுள் கலந்துடன் எய்திய அந்தம்
ஆதி யாக வரும்என மொழிப.’
- பன். பாட். 213
‘சொல்லிய கலம்பகத் தொடர்பு நோக்கில்
ஒருபோகு முதற்கண் வெண்பாக் கலித்துறை
புயமே அம்மனை ஊசல் மதங்கு
களிமறம் சித்துக் காலம் மடக்கே
வண்டே கொண்டல் மருள்சம் பிரதம்
வெண்டுறை தாழிசை வஞ்சித் துறையே
இன்னிசை குறமே அகவல் விருத்தம்என்று
வந்த செய்யுள் கலந்துடன் எய்தி
அந்தம் ஆதியாய் வரும்என மொழிப.’
- பன். பாட்.
‘வைக்கும் புயம்தவம்வண்(டு) அம்மனைபாண் மதங்கு
கைக்கிளைசித்(து) ஊசல்களி மடக்(கு)ஊர் - மிக்கமறம்
காலம் தழைஇரங்கல் சம்பிரதம் கார்தூது
கோலும் கலம்பகத்தின் கூறு.’
- வெண். பாட். செ. 10
‘கூறும் ஒருபோகு வெண்பாக் கலித்துறைகள்
மாறில் முதல்உறுப்பா மன்விருத்தம் - வேறகவல்
வஞ்சித் துறைவிருத்தம் வான்துறைவெண் பாமருட்பா
எஞ்சாக் கலியினம் கொண்(டு) ஈட்டு.’
- வெண். பாட். 11
|