170                      இலக

170

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     ‘மூலம் ஒருபோகுவெண்பாக் கலித்துறை முன்உறுப்பாம்

     ஏலும் புயத்தோடு அம்மானைகார் ஊசல் இரங்கல்மறம்

     கோலம் தழைதவழ் சித்துப்பாண் கைக்கிளை தூதுகுறம்

     காலம் மதங்கிகளி சம்பிரதம் கலம்பகமே.’                 

- நவ. 32

    ‘சொன்ன கலம்பகம் தொக்க அச்செய்யுள் துடியைவென்ற

     மின்னிடை! வெண்டுறை வெண்பாஅகவல் விருத்தமுடன்

     இன்னிசை எண்ணிய வண்ணம் கலியொடு தாழிசையும்

     மன்னு மருட்பா வஞ்சித்துறை வஞ்சிவிருத்தம் என்னே.’

                                                     - நவ. 33

    கொண்டபுயம் தவம்மதங்கு அம்மானை காலம்

          குறம்களிசம் பிரதம்மறம் பாண்கார் தூது

     வண்டுதழை கைக்கிளைசித்து இரங்கல் ஊசல்

          மடக்குமருட் பாஅகவல் விருத்தம் வெண்பா

    வெண்டுறைவஞ் சித்துறைஆ சிரியம் வஞ்சி

          விருத்தப்பாக் கலியினம்அந் தாதி யாகக்

     கண்டவைமுன் னாதியொரு போகு வெண்பாக்

          கலித்துறைநேர் கூறல்கலம் பகமாம் அன்றே.’

                                               - சிதம். பாட். 29

    ‘கலம்பகத் துட்புயம் கைக்கிளைத் தவமே

     காலம்வண்டு அம்மானை காற்றுப் பாணன்

     குறம்சித்து இரங்கல் குளிர்தழை சம்பிரதம்

     மறம்தூது ஊசல் மதங்கம் மடக்குஎன

     விரவிமூ வாறும் வேண்டும் உறுப்பா

     ஒருபோகு வெண்பா உடன்கலித் துறைஇவை

     நிரையே முதற்கண் நின்றுபிற் கலந்தஐம்

     பாத்துறை விருத்தம் அந்தாதி வருமே;

     வந்தால் ஈசற்கு வரும்நூறு; முனிமெய்யர்க்கு

     ஐந்துஅஃகும்; அரசர்க்கு ஆம்தொண் ணூறு;

     அமைச்சர்க்கு எழுபதும் ஐம்பதும் வணிகர்க்கு

     அமைந்த; ஏனையோர்க்கு ஆறைந்து அளவே.’

                                                - தொ. வி. 258