172                      இலக
172

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

 

    மருவு வெண்பாக் கலித்துறை விரவி, அந்தாதி

          வரன்முறைத் தொடையதாக,

    உரிய தேவர்க்குநூறு, அந்தணர்க்குத் தொண்ணூறு

          உடன்ஐந்தும், அரசருக்கே

    உற்றிடும் தொண்ணூறு, வணிகருக்கு ஐம்பதாய்,

          உரைசதுர்த்தர்க்கு முப்பான்

    ஓதுவர் கலம்பகத்து உரியதாம்.’                         

- பி. தீ. 7

 

     ‘வெண்பாக் கலித்துறை யோடுஒரு போகு

     முதற்கலி மூன்றுறுப் பாக மொழிந்து

     வாகு வகுப்பு மதங்கம் அம்மனை

     காலம்சம் பிரதம் கார்தவம் குறம்மறம்

     பாண்களி இரங்கல் சித்துஊசல் கைக்கிளை

     தூதுஅளி தழைஇவை தோன்ற, மடக்கு

     மருட்பா அகவல் வஞ்சி கலிப்பா

     அகவல் விருத்த மொடுகலித் தாழிசை

     கலிவிருத் தம்துறை காமரு வெண்டுறை

     விரவி, அந் தாதியாய், விளம்பும் காலைக்

     கலம்பகம் என்மனார் கற்றுணர்ந் தோரே.’         

                                            - மு. வீ. யா. ஒ. 80

                                                               52

கலம்பகப் பாடல் தொகை

813. அதுவே,

    இமையவர்க்கு ஒருநுறு, இழிபுஐந்து ஐயர்க்கு,

    அமைதரும் அரசர்க்கு ஆகும் தொண்ணூறு,

    அமைச்சருக்கு எழுபான், வணிகருக்கு ஐம்பான்,

    அமைத்தனர் பின்னவர் தமக்குஆ றைந்தே.

 

இது மேலதற்குப் பாட்டு வரையறை கூறுகின்றது.

      இ - ள் : மேல்கூறப்பட்ட கலம்பகம்தான் தேவர்க்கு நூறும்
அந்தணருக்குத் தொண்ணூற்றைந்தும்