பாட்டியல்
- நூற்பா எண் 53 |
173 |
அரசர்க்குத் தொண்ணூறும், அமைச்சருக்கு எழுபதும், வணிகருக்கு ஐம்பதும்
வேளாளருக்கு முப்பதுமாகப்
பாடுக என அமைத்தனர் புலவர் என்றவாறு.
‘அமைதரும்’ என்பதனால் அந்தணரைத் தேவர்க்கு ஒப்பவும் குறுநில
மன்னரை அரசர்க்கு ஒப்பவும் பாடுதலும் கொள்க.
(53)
ஒத்த நூற்பாக்கள்
‘தேவர்க்கும் முனிவர்க்கும் காவல்அர சர்க்கும்
நூறு தொண்ணூற் றைந்துதொண் ணூறே,
ஒப்பில் எழுபது அமைச்சிய லோர்க்கு,
செப்பிய வணிகர்க்கு ஐம்பது, முப்பது
வேளா ளர்க்கென விளம்பினர் செய்யுள்.’
- பன். பாட். 214
‘ஈசர்க்கு நூறு, இழிபுஐந்து ஐயர்க்கு, இகல் அரசர்க்கு
ஆசற்ற தொண்ணூறு, அமைச்சருக்காம் - ஏசா
எழுபான், ஐம்பான் வணிகர்க்கு, ஏனையோர்க்கு ஆறைந்து,
இழிபில் கலம்பகப்பாட்டு ஈண்டு.’
- வெண். பாட். செ. 12
‘தேவர்க்குநூறு, முனிவர்க்கு இழிபுஐந்து, சேணிலத்தைக்
காவற்குஉரிய அரசர்க்குத் தொண்ணூறு, காவலரால்
ஏவல் தொழில்பெற்ற மாந்தர்க்கு எழுபது, இருநிதியம்
மேவப் படுமவர்க்கு ஐம்பது, முப்பது மிக்கவர்க்கே.’
- நவ.34
‘அன்புறுதே வர்க்குநூறு, இழிபுஐந்து ஐயர்க்கு,
அரசர்க்குத் தொண்ணூறு, வணிகர்க்கு ஐம்பான்,
இன்புறுமுப் பான்உழவர்க்கு, அமைச்சின் உள்ளோர்க்கு
எழுபதெனும்
கலம்பகம்.’
- சிதம். பாட். 30
|