174 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
‘தேவர்க்கு நூறு, அந் தணர்க்குஐந்து ஒழித்தது,
அரசர்க்குத் தொண்ணூறு, ஐம்பது வைசியர்க்கு,
ஆறைந்து சூத்திரர்க் காகப் பகர்தரல்
கலம்பகம் என்மனார் கற்றுணர்ந் தோரே.’
- மு. வீ. யா. ஒ. 80
53
பன்மணி மாலை
814. அவற்றுள்,
ஒருபோகு அம்மானை ஊசல் இன்றி
வருவது பன்மணி மாலை ஆகும்.
இது பன்மணிமாலை இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: அக்கலம்பகம்தானே ஒருபோகும் அம்மானையும் ஊசலும்
இன்றி ஏனை உறுப்புக்கள் எல்லாம்
வரப்பாடுவது பன்மணிமாலையாம்
என்றவாறு.
பன்மணிமாலை கலம்பக மாலை எனவும் கூறப்படும்.
(54)
ஒத்த நூற்பாக்கள்
‘ஒருபோ குடனே அம்மனை நீக்கி
வெள்ளை முதலா எல்லா உறுப்பும்
தள்ளா இயலது கலம்பக மாலை.’
- பன். பாட். 960
‘ஒருபோகு அம்மனை ஒழித்துவெண் பாமுதல்
கருதின் பேரது கலம்பக மாலை.’
’’ 261
அம்மானை - கூர்ந்து ஒருபோகு
ஊசல் ஒழிந்தால் கலம்பகப்பா ஒண்மாலை
பேசிய பன்மணியாம்
பின்பு.’
- வெண். பாட். செ. 18
|