பாட்டியல் - நூற்பா எண்
54 |
175 |
கூறும் கலம்பகத்தின்,
ஆட்டிய அம்மானை
ஊசல்ஒரு போகும் அற்றது இந்தப்
பாட்டியல் பன்மணிமாலை
என்றுஓதுவர் பாவலரே.’
- நவ. 38
கலம்பகத்தம் மானை ஊசல்
முன்புஒருபோகு ஒழித்ததுபன்
மணிமா லைப்பேர்.’
-
சிதம். பாட். 30
‘பன்மணி மாலை பன்னில்
கலம்பகத்து
ஒருபோகு அம்மானை
ஊசல்இவை நீத்து
அகவல் வெள்ளை
அருங்கலித் துறைஎன்று
அவைசெறி நூறுஅந் தாதியாய்
வருமே.’
- தொ. வி. 280
‘அறைந்த கலம்பகத்து
அம்மானை ஊசல்
ஒருபோகு என்பன ஒழியச்
சிறப்பித்து
அந்தா தித்துநூறு
அறைவது பன்மணி
மாலை என்ப மாண்புஉணர்ந்
தோரே.’
-
பி. ம. 7
‘அலகுறு கலம்பகத்துள்வரும்
ஒருபோகு
அம்மானை
ஊசல் மூன்றும்
அன்றி மேல்சொல்லிய
உறுப்புஅமைத்து அவ்வாறு
அரற்றல் பன்மணி
மாலையாம்.’
- பி. தீ. 12
‘முற்கூ றியகலம்
பகத்துள் வரும்ஒரு
போகும் அம்மனை
ஊசலும் போக்கி
ஏனை உறுப்புக்கள்
எல்லாம் அமையப்
பாடுவது அதுதான் பன்மணி
மாலை.’
- மு. வீ. யா. ஒ. 94
54
மும்மணிக்கோவை
815. அகவல் வெண்பா
அசைஎண் கலித்துறை
தொகைமுப் பதுபெறச்
சொற்றொடர் நிலையின்
கூறுதல் மும்மணிக்
கோவை ஆகும்.
இது மும்மணிக்கோவை இலக்கணம்
கூறுகின்றது.
|