176                      இலக
176

 இலக்கண விளக்கம் - பொருளதிதிகாரம்


 

     இ - ள் : ஆசிரியப்பாவும் வெண்பாவும் நேரசையும் நிரையசையும்
கொண்டு எழுத்து எண்ணிப்பாடும் கலித்துறையும் முறைமுறை தொகை
முப்பதுபெற அடுக்கி, அந்தாதித் தொடையாற் பாடுவது
மும்மணிக்கோவையாம் என்றவாறு.                     

 (55)

விளக்கம்

    ஆசிரியம் வெண்பா கலித்துறை ஒன்றன்பின் ஒன்று அமைய முப்பது
 பாடலாகப் பாடப்படுவது.

 

     ‘வெள்ளையும் அகவலும் நேரிசை யாகக்

     கலித்துறை வரஅந் தாதி யாகி

     முறைமையின் இயல்வது மும்மணிக் கோவை.’

                                                - பன். பாட். 262

    ‘தோன்றிய அகவல் வெள்ளை கலித்துறை

     மூன்றும் வருவது மும்மணிக் கோவை.’                     

- 263

     ‘மும்மூன்று ஒருபொருள் மிசைவரும் என்ப.’                

 - 264

                                          - ஆண்டு அகவல்

     ‘முன்முறையே வெண்பா கலித்துறை அந்தாதி

     மும்மணிக்கோ வைக்கு முதல்.’              

- வெண். பாட். செ. 13

    ‘முன்ஆசிரியம் வெண்பாக் கலித்துறை முப்பதுஎன்று

     சொன்னார்கள் மும்மணிக் கோவைக்கு.’                  

- நவ. 35

     ‘பேசுஅகவல் வெள்ளைகலித் துறைமுப் பானால்

          சொன்னதுமும் மணிக் கோவை.’             

- சிதம். பாட். 31

     ‘மும்மணிக் கோவையே முப்பதுஅந் தாதியாய்

     அகவல் வெள்ளை கலித்துறை முறைவரும்.’          

- தொ. வி. 281