பாட்டியல் - நூற்பா எண்
55, 56 |
177 |
‘அகவல் வெண்பா கலித்துறை என்பன
முப்பது விரவின் மும்மணிக் கோவை’.
- பி. ம. 12
‘நேரும் ஆசிரியமும் வெண்பாவும் நேரசை
நிரையசை எழுத்தும் எண்ணி
நீள்கலித் துறையுடன் முப்பது அந்தாதியின்
நெறிபெறத் தொடையதாக
நிலைபெற உரைப்பதே மும்மணிக் கோவையாய்
நீள்நிலத்து உரைசெய்வரே.’
- பி. தீ. 7
‘அகவல்வெண் பாக்கட் டளைக்கலித் துறையும்
முறையே தொகைபெற முப்பது அடுக்கி
அந்தா தித்தொடை யாகச் செய்வது
மும்மணிக் கோவையாம் மொழியுங் காலே.’
- மு. வீ. யா. ஒ. 84
55
அகப்பொருட்
கோவை
816. முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முகந்து
களவு கற்புஎனும் வரைவுஉடைத் தாகி
நலன்உறு கலித்துறை நானூறு ஆக
ஆறிரண்டு உறுப்பும் ஊறின்றி விளங்கக்
கூறுவது அகப்பொருள் கோவை ஆகும்.
இஃது அகப்பொருட்கோவை இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: இருவகைப்பட்ட
முதற் பொருளும், பதினான்கு வகைப்பட்ட
கருப்பொருளும் பத்து வகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்தி,
கைக்கிளை
முதலுற்ற அன்புடைக் காமப் பகுதியவாம் களவொழுக்கத்தினையும்
கற்பொழுக்கத்தினையும்
கூறுதலே எல்லையாகக் கொண்டு, நன்மையுற்ற
23-24
|