பாட்டியல் - நூற்பா எண் 56

 179


 

 

    ‘ஆய்ந்த கலித்துறைதான் நானூறு அகப்பொருள்மேல்

     வாய்ந்தநற் கோவையாம் மற்று.’               

- வெண். பாட். செ. 15

    ‘பொருளதி காரத் திறத்தைப் புகன்று கலித்துறைகள்

     வருவது நானூறும் கோவை என்றுஆகும்.’                 

- நவ. 52

    ‘கலித்துறை நானூறாய் நடப்பது அகப்பொருட்கோவை.’  

- சிதம். பா. 30

    ‘தூண்டும் அகப்பொருள் துறைவளர்ந்து அமையக்

     கருதி நானூறு கலித்துறை யாகக்

     காதல் அன்புறு காந்தருவ மணத்தில்

     கொடிச்சியும் ஊரனும் குலவுநெறி நடப்பது

     அகப்பொருட் கோவை ஆம்என மொழிப.’              

- பி. ம. 10

    ‘இரு வகைப்பட்ட முற்பொருளுடன் பன்னான்கு

          எனும்கருப் பொருள்களோடு

    ஈரைந்து உரிப்பொருள் பொருந்து கைக்கிளைஆதி

          இயைவுற்ற அன்புஉடைத்தாய்ப்

    பெருகு காமப் பகுதியாம் களவொழுக்கமும்

          பெண்கற்பு ஒழுக்கத்தினும்

    பேதம் அன்றிக் கட்டளைக்கலித் துறையினைப்

          பெறும்ஓர் நானூற்றால்திணை

    உரிய கைக்கிளை முதல்துறை இறுதியா மொழி

          உற்றஈராறு அகப்பாட்டு

    உறுப்பும் வழுவின்றிச் சிறப்புடன் ஓதலும்

          உறும்அகப் பொருட்கோவையாம்.’                  

 - பி. தீ. 8

    ‘முதல கருஉரிப் பொருள்ஒரு மூன்றும்

     அடைந்து, கைக்கிளை அன்புடைக் காமப்

     பகுதிய வாங்களவு ஒழுக்கமும் கற்பும்

     இயம்புத லேஎலை யாகக் கட்டளைக்

     கலித்துறை நானூற் றால்திணை முதலாத்

     துறையீ றாகச் சொல்லப் பட்டு