180 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
ஈராறு அகப்பாட்டு உறுப்பும் இயையக்
கூறுவது, அகப்பொருட் கோவையாம், மற்றிஃது
அகவல் வெண்பாக் கலியடுக் கியவண்ண
வஞ்சியி னாலும் வழுத்தப் படுமே.’
- மு. வீ. யா. ஒ. 81
56
தொகைச் செய்யுள்
817. நெடுந்தொகை குறுந்தொகை கலித்தொகைஎன்னப்
படுந்தொகைச் செய்யுள் பற்பல ஆகும்
இது தொகைநிலைச் செய்யுள் இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: அளவான் நெடுந்தொகை எனவும் குறுந்தொகை எனவும் பாட்டால்
கலித்தொகை எனவும்
கூறப்படும் தொகைநிலைச்செய்யுள் மிகப் பலவாம் என்றவாறு.
‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறம்என்று
இத்திறத்த எட்டுத் தொகை.’
‘பற்பல’ என்றதனால் வள்ளுவர்முப்பால் நாலடி நான்மணிக்கடிகை திரிகடுகம்
சிறுபஞ்சமூலம் ஏலாதி
முதலாயின எல்லாம் ஆம் என்று அறிக.
(57)
விளக்கம்
தொகைச்செய்யுள் பன்னிரு பாட்டியலில் கணக்கு என்ற பெயரான் வழங்கப்படுகிறது.
‘மேல்கீழ் கணக்கென இருவகைக் கணக்கே.’
- பன். பாட். 344
‘மேற்கணக்கு எனவும் கீழ்க்கணக்கு எனவும்
பாற்படும் வகையான் பகர்ந்தனர் கொளலே.’
- 345
|