பாட்டியல் - நூற்பா எண் 57 |
181 |
‘அகவலும் கலிப்பா வும்பரி பாடலும்
பதிற்றைந்து ஆதி பதிற்றைம்பது ஈறா
மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக்கு எனவும்
வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின்
எள்ளறு கீழ்க்கணக்கு எனவும் கொளலே.’
- பன். பாட். 346
‘ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா
ஐவகைப் பாவும் பொருள்நெறி மரபின்
தொகுக்கப் படுவது மேற்கணக்கு ஆகும்.’
-
347
‘அடிநிமிர்பு இல்லாச் செய்யுள் தொகுதி
அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வத்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்கு ஆகும்.’
-
348
‘நெடிலடிச் செய்யுளால்,
நிலையில் தொகுத்தும் குறுந்தொகை முன்பின்
நெடுந்தொகையாய்க்
கலியில் தொகுத்துக் கலித்தொகைபோலாம்
தொகைநிலையே.’
- நவ. 12
‘தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின்
ஒருவன் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
பொருள்இடம் காலம் தொழில்என நான்கினும்
பாட்டினும் அளவினும் கூட்டிய தாகும்.’
- தண்டி. தொ. வி. 253
நெடிலடிச் செய்யுள் தொகுத்தது நெடுந்தொகையும்
நேர் குறிலடிச் செய்யுளால்
நிரவித் தொகுத்தது குறுந்தொகை; கலிப்பாவின்
நேர் தொகும் தொகையுமாய்
முடிவதே போல்வன தொகைச்செய்யுளாம்.’
-
பி. தீ. 18
‘நெடிலடிப் பாவால் தொகுத்தது நெடுந்தொகை;
குறளடிப் பாவால் தொகுத்தது குறுந்தொகை;
கலியில் தொகுத்தது கலித்தொகை போல்வன;
தொகைநிலைச் செய்யுள் எனச்சொலப் படுமே.’
- மு. வீ. யா. ஒ. 120
57
|