182 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
|
இணைமணிமாலை
818.
வெண்பா அகவல் வெண்பாக் கலித்துறை
பண்பால் ஈரைம் பஃதுஅந் தாதி
இயலின் வகுப்பது இணைமணி மாலை
இஃது
இணைமணிமாலை இலக்கணம் கூறுகின்றது.
இ-ள்: வெண்பாவும் அகவலும் வெண்பாவும் கலித்துறையுமாக
இரண்டிரண்டாக இணைத்து வெண்பா அகவல் இணைமணிமாலை,
வெண்பாக் கலித்துறை இணைமணிமாலை என நூறுநூறு அந்தாதித்
தொடையாக வரப்படுவது இணைமணிமாலையாம் என்றவாறு.
(58)
ஒத்த நூற்பாக்கள்
‘இணைமணி மாலை தணிவுஇல்அந் தாதியாய்
மறையவர் பாவும் வணிகர்தம் பாவின்
துறையும் இயைந்துஈர் ஐம்பது வருமே.’
- பன். பாட். 252
‘வெண்பாக் கலித்துறை ஈரிரண்டு இயைந்த
ஒண்பா நூறுஅவை இணைமணி மாலை.’
- 253
‘இருபான்
- ஏய்ந்தசீர்
வெண்பா கலித்துறையாம் மேவிய நான்கால்நூறு
ஒண்பா இணைமணியாம் ஓர்.’
- வெண். பாட். செ. 17
‘வருபா (வெண்பா, கலித்துறை) இரண்டிரண்டாய்த்
தம்முள்
மாறின்றி நூறுவரின்
பொருமா விழியாய்! இணைமணிமாலை புகல்வர்களே.’
- நவ.
36
‘அகவற்பாவால் பின்னர்க் கலித்துறையது
இணைமணி
மாலைப்பேர்.’
- சிதம். பாட். 31
|