பாட்டியல் - நூற்பா எண் 58, 59

 183


    

 

     ‘இணைமணி மாலைஇணை வெண்பாக் கலித்துறை

     அகவல்மன் விருத்தம் தொடர்ந்துநூறு இயம்பலே.’

                                                 - தொ. வி. 282

     ‘வெண்பாத் தொகைமுதல் பாக்கலித் துறைநன்கு

     இணைய இயம்புவது இணைமணி மாலை.’          

- பி. ம. 12

         ‘பாடுறும் முறைமையினால் வெண்

     பாவும் அகவலும் வெள்ளையும் கலித்துறையுடன்

          பகுத்தே இரண்டி ரண்டாய்

 நண்பால் இணைத்து வெண்பா அகவல் மணிமாலை

          நவிலும் எழில் வெண்பாவுடன்

     நற்கலித்துறை இணைமணிமாலை என்னவே

          நவில்நூறு நூறதாக

எண்பாவலர்க்கு இயைவுறும் சிறப்பாகவும்

          எய்தும் அந்தாதியால் சொற்கு

     இயைந்த தொடையோ நாலதாகவும் பண்புடன்

          இயம்பல் இணைமணி மாலையே.’     

- பி. தீ. 10

     ‘வெண்பா அகவல் வெண்பா கலித்துறை

     இரண்டிரண் டாக இணைத்து வெண்பா

     அகவல் இணைமணி மாலை வெண்பாக்

     கலித்துறை இணைமணி மாலை ஆகும்.’    

 - மு. வீ. யா. ஒ. 89

                                                       58

 

                    இரட்டைமணி மாலை

 

819.    இருபது வெண்பாக் கலித்துறை இயைபின்

    வருவது இரட்டை மணிமாலை ஆகும்.

 

இஃது இரட்டை மணிமாலை ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள் : முறையானே வெண்பாவும் கலித்துறையும் இருபது
 அந்தாதித்தொடையான் வருவது இரட்டை மணிமாலையாம் என்றவாறு.                                                    

 (59)