184 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
விளக்கம்
முதலில் வெண்பாவும் அடுத்துக் கலித்துறையும்
அடுத்து மீண்டும்
வெண்பாவும் இவ்வாறாக அந்தாதித்
தொடையான் இருபது பாடப்படுவது
இரட்டை மணிமாலையாம்.
ஒத்த நூற்பாக்கள்
‘வெண்பா முதலாக் கலித்துறை பின்வரும்
இந்த இருபது இரட்டைமணி மாலை.’
- பன். பாட். 254
‘ஆதி அந்தம் வெண்பாக் கலித்துறை
ஏதமின்றி வருவது இரட்டைமணி மாலை
அதுவே நாலைந்து இயலும் என்ப.’
’’ 255
‘ஆய்ந்த இரட்டை மணிஇருபான் - ஏய்ந்தசீர்
வெண்பா கலித்துறையாம்.’
- வெண். பாட். செ. 17
‘இரட்டைமணி,
தருபாஇருபது வெண்பாக்
கலித்துறைதாம் இவையாம்.’
- நவ. 36
‘மன்இருபான் வெள்ளைகலித் துறைஇரட்டை மணிமாலை.’
- சிதம். பா. 31
இரட்டைமணி மாலையாம் இணைந்தபப் பத்தாய்
வெண்பா கலித்துறை விரவிப் பாடலே.’
- தொ. வி. 278
‘கருதும் வெண்பாக் கலித்துறை விரவி
இருபது வழுத்துவது இரட்டைமணி மாலை.’
- பி. ம. 11
‘வெண்பாக் கலித்துறையும் இருபதுஅந் தாதியாய்
மேவுதொடையாய் வருவதின்
மிக்க ஆசிரிய விருத்தம் ஒருபத்துநேர்
வெண்பாவும் ஒருபத்துடன்
பண்பாய் உரைப்பது இரட்டைமணி மாலையாம்.’
- பி. தீ. 10
|