பாட்டியல் - நூற்பா எண் 59, 60

 185


 

  

     ‘இருபது அந்தா தித்துவெண் பாவும்

     கட்டளைக் கலித்துறை யுங்கலந்து உரைத்தல்

     இரட்டை மணிமாலை என்மனார் புலவர்.’

                                        - மு. வீ. யா. ஒ. 88

                                                       59

 

                       மும்மணி மாலை

 

820. வெண்பாக் கலித்துறை அகவல்அந் தாதிப்

    பண்பால் முப்பது பகரின் மும்மணி

    மாலை என்று வகுத்தனர் புலவர்.

 

இது மும்மணிமாலை ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்; வெண்பாவும் கலித்துறையும் அகவலும் அந்தாதியாக முப்பது பாடின் அதனை மும்மணிமாலை என்று கூறுவர் புலவர் என்றவாறு.                                        

(60)

 

                       ஒத்த நூற்பாக்கள்

 

     ‘மிகுந்த வெள்ளை கலித்துறை அகவல்

     விருத்தம் மும்மணி விளம்பும் அந்தாதி.’    

 - பன். பாட். 256

     ‘வெண்பாக் கலித்துறை அகவல் விருத்தம்

     வண்பா மூன்றவை மும்மணி மாலை.’

     வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம்

     கொள்வ மும்மணி கோத்தஅந் தாதி.’    

                                 - பன். பாட். - பிற்சேர்க்கை

     ‘மன்னிய வெண்பா கலித்துறை மன்னர்பா

     முன்னியமுப் பால்மும் மணிமாலை........

     ஈட்டியஅந் தாதியாம் ஏய்ந்து.’       

- வெண். பாட். செ. 16

     மும்மணிமாலைசொல்லின், அந்நான்மறைப்பா,

                         கலித்துறை, ஆசிரியம்.’                      

- நவ. 35