186                      இலக
186  

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

 

     ‘வெள்ளை, நற்கலியின்துறை அகவல் அந்தாதித்த

          நடைமுப்பான் மும்மணி மாலைப்பேர்.’

                                        - சிதம். பாட். 3

     ‘மும்மணி மாலையாம் முறைமாறி வெள்ளை

     கலித்துறை அகவல் கதிபெறும் செய்யுளே.’

                                        - தொ. வி. 281

     ‘வெண்பா கலித்துறை அகவற் பாமூன்று

     அந்தா தித்து முப்பஃது இயம்பின்

     மும்மணி மாலை.’                   

- பி. ம. 20

     ‘பகரும்வெண் பாக்கலித்துறை அகவல் முப்பதும்

          பன்னுதொடை அத்தாதியாய்ப்

     பாடல்மும் மணிமாலை.’                

- பி. தீ. 14

     ‘ஆதிப் பாக்கலித் துறையும் அகவலும்

     அந்தா தித்தா றைந்தியம் புவது

     மும்மணி மாலையாம் மொழியுங் காலே.’   

                                        - மு. வீ. யா. ஒ. 106

                                                       60

 

                     நான்மணி மாலை

 

821. வெண்பாக் கலித்துறை விருத்தம் அகவல்

    பின்பேசும் அந்தா தியின்நாற் பதுபெறின்

    நான்மணி மாலை ஆம்என நவில்வர்.

 

இது நான்மணிமாலை ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: வெண்பாவும் கலித்துறையும் அகவலும் பின்னும் முன்னும்
ஒன்றிய விருத்தமும் மேற்கூறிய அந்தாதியான் நாற்பது வரின்
நான்மணிமாலையாம் என்று கூறுவர் புலவர் என்றவாறு. 

(61)