பாட்டியல் - நூற்பா எண் 61

187


 

 

               ஒத்த நூற்பாக்கள்                      

 

     ‘வெண்பாக் கலித்துறை அகவல் விருத்தம்

     நண்பாய் வருவது நான்மணி மாலை.’          

 பன். பாட். 257

     ‘அகவலும் அகவல் விருத்தமும் நாற்பது,

     அகவலை முன்வைத்து அறைவது கடனே.’       

 ’’     258

     ‘வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம்

     கொள்வது நான்மணி கோத்தஅந் தாதி.’        

 ’’     259

     ‘வெண்பா முன்வரக் கலித்துறை அகவல்

     விருத்தம் நண்பாய் வருவது நான்மணி

     மாலை என்று வகுத்துரைத் தனரே.’

                       - பன். பாட். பிற்சேர்க்கை

     ‘மன்னிய வெண்பா கலித்துறை மன்னர்பா

     முன்னியமுப் பால்மும் மணிமாலை - மன்விருத்தம்

     நாட்டிய நாற்பது நான்மணி மாலையாம்

     ஈட்டிய அந் தாதியாம் ஏய்ந்து.’       

-வெண். பாட். 16

     ‘அந்நான் மறைப்பாக் கலித்துறை ஆசிரியம் விருத்தம்

     இந்நால்வகைச் செய்யுள்நாற்பது நான்மணிமாலை என்னே.’

                                             - நவ. 35

    ‘வெள்ளை, நற்கலியின் துறைஅகவல் அந்தாதித்த

          நடைமுப்பால் மும்மணி மாலைப்பேர் மேலோர்;

     ஒற்கமில்ஆ சிரியவிருத் தத்தைக் கூட்டில்

          ஒருநாற்பான் நான்மணிமா லைக்கென் றோதே.’

                                        - சித. பாட். 33

     ‘நான்மணி மாலையே நாற்பதந் தாதியாய்த்

     தான்மணிக்கு ஒத்தன தந்தன்மன விருத்தமே.’

                                        - தொ. வி. 272