188
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
‘வெண்பா கலித்துறை அகவற் பாமூன்று
அத்தா தித்து முப்பதின் மேல்வர
ஆசிரியம் பத்தும் அந்தா தித்து
நவில்வது ஆகும் நான்மணி மாலையே.’
- பி. ம. 20
நிகரில் வெண்பா கலித்துறை விருத்தம்அகவல்
நேரும் அந்தாதித்தொடை
நிலைபெறவே எண்ணைந்து செய்யுளாய்ச் சீருற
நிகழ்த்தல் நான்மணி மாலையாம்.’
- பி. தீ. 11
‘அந்தா தித்து வெண்பாக் கலித்துறை
விருத்தமும் அகவலும் விரவி நாற்பது
நவில்வது நான்மணி மாலை ஆகும்.’
- மு. வீ. யா. ஒ. 91
61
இருபா இருபஃது
822.
ஒருபது வெண்பா ஒருபஃது அகவல்
இருபது வரின்இரு பாஇரு பஃதே.
இஃது
இருபா இருபஃது ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: பத்து வெண்பாவும் பத்து அகவலும் அந்தாதித்
தொடையாக
இருபது இணைந்துவரின் இருபா இருபஃது என்றவாறு.
(62)
ஒத்த நூற்பாக்கள்
‘வெள்ளை அகவல் பின்னர் முறைவைத்து
எள்ளாது இயல்வது இருபா இருபஃது.’
- பன். பாட். 339
‘ஒருபா ஒருபதும் இருபா இருபதும்
கருதிய வெள்ளையும் அகவலும் காட்டினர்.’
’’ 340
‘ஏய்ந்த இருபா இருபதுவெண் பாஅகவல்.’
- வெண். பாட். செ. 17
|