பாட்டியல் - நூற்பா எண் 62, 63

 189


 

 

     ‘இருபா இருபஃது வெண்பா அகவல்.’      

 - நவ. 36

     ‘வெள்ளை அகவற் பாவால் பன்னும் இருபா இருபஃது.’

                                         

- சித. பாட். 31

     ‘இருபா இருபதாம் இணைந்தநா லைந்தாய்

      வெள்ளை அகவல் விரவிப் பாடலே.’          

 - தொ. வி. 265

     ‘வெள்ளைமுன் அகவல்பின் விரவ இருபான்

      இயம்புவது இருபா இருபஃது.’             

  - பி. ம. 15

 ‘ஒலி அகவல் பத்து வெண்பாப்பத்தும் அந்தாத

 உற்றதொடை இருபான் நினைந்து

 ஓதும் இருபா இருபஃதுஆகும்.’ 

     - பி. தீ. 21

     ‘அகவல் வெண்பாவும் அந்தாதித் தொடையால்

      இருபது இணைந்து வரஎடுத்து உரைப்பது

      இருபா இருபஃது என்மனார் புலவர்.’        

- மு. வீ. யா. ஒ. 128

                                                       62

 

                 ஒருபா ஒருபஃது

 

823.    அகவல் வெண்பாக் கலித்துறை அதுகொண்டு

    ஒருபா ஒருபஃது உறின்அப் பெயராம்.

 

இஃது ஒருபா ஒருபஃது ஆமாறு கூறுகின்றது.

 

     பொருள் வெளிப்படை.                           

(63)

                         ஒத்த நூற்பாக்கள்

   

     ‘வெள்ளை ஆதல் அகவல் ஆதல்

     தள்ளா ஒருபது ஒருபா ஒருபது.’       

- பன்.பாட். 338

  ‘ஓர்ந்தகவல் வெண்பா கலித்துறைஎன் றொன்றினால்

     ஆய்ந்தஒரு பாஒருப தாம்.’    

- வெண். பாட். செ. 18