190                      இலக
190

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


                 

 ‘அகவல் முதற்பாக் கலித்துறையான் ஒன்றுஅந்தாதிவரத்

  தகும் ஒருபா ஒருபஃது ஆகும்.’                 

- நவ. 15

 ‘எப்பாட்டேனும் தீதில்ஒருபான் ஒருபா ஒருபஃதென்ப.’

                                                - சித. பாட். 34

 ‘ஒருபா ஒருபதாம் உரைப்பரும் வெண்பா

  அகவல் கலித்துறை அவற்றுள் ஒன்றால்

  பத்தெனப் பாடிப் பகுத்த செய்யுளே.’            

 - தொ. வி.  264

                               ‘ஓர்பாவில் அந்தாதித்து

     ஈரைந்தாச் சொல்வது ஒருபா ஒருபதாம்.’     

- பி. ம. 23

 ‘கலித்துறையி னாலும் நேர்வெண் பாவினால்அ

          கவலாயினும் ஒவ்வொன்றினைக்

  கணித்துஒன்று பப்பத்தின் அந்தாதி யாகவே

          கழறும்ஒருபா ஒருபஃது.’                

- பி. தீ. 21

 ‘அகவல் வெண்பாக் கலித்துறை ஆகிய

  இவற்றுள் ஒன்றினால் அந்தாதித் தொடையாய்

  ஒருபஃது உரைப்பது ஒருபா ஒருபது.’    

- மு. வீ. யா. ஒ. 127

                                                       63

 

                   ஒலி அந்தாதி

 

824. ஈண்டிய வண்ணம்ஈ ரெண்கலை முப்பான்

    ஆண்டது ஒலிஅந் தாதி ஆகும்.

 

இஃது ஒலிஅந்தாதி ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: பலசந்தம் கூடிய பதினாறு கலைவகுப்பானாய முப்பது
எண்ணான் ஆளப்பட்டது ஒலிஅந்தாதியாம் என்றவாறு.                             

 (64)