பாட்டியல் - நூற்பா எண் 64

    191


                        

 

     ‘தத்தம் இனத்தில் ஒப்புமுறை பிறழாது

     நாலடி ஈரெண் கலைஒரு முப்பது

     கோலியது ஒலிஅந் தாதி ஆகும்.’  

          - பன். பாட். 267

     ‘ஈரொலி ஆகிய எண்ணான்கு கலையெனச்

     சீர்இயற் புலவர் செப்பினர் கொளலே.’        

’’     268

     ‘வண்ணகம் என்பது ஒலிஎனப் படுமே.’       

  ’’     269

     ‘ஈண்டிய முப்பதாய் ஈரெண் கலைவண்ணம்

     மூண்டதொலி அந்தாதி முப்பதாம்.’

                                              - வெண். பாட். செ.

     ‘ஈட்டியஈரெண் கலைவண்ணச் செய்யுள் இயைந்து முப்பான்

     கூட்டிய நீடுஒலி அந்தாதி.’                   

- நவ. 18

 

     பதினாறுகலை ஓரடியாக வைத்து இங்ஙன் நாலடிக்கு அறுபத்துநாலு கலை வகுத்துப் பலசந்தமாக வண்ணமும் கலைவைப்புத் தவறாமல்
அந்தாதித்து முப்பது செய்யுள் பாடுவது. சிறுபான்மை எட்டுக்கலையானும்
வரப்பெறும். அன்றியும் வெண்பா அகவல் கலித்துறை ஆகிய
இம்மூன்றையும் பப்பத்தாக அந்தாதித்துப் பாடுவதுமாம்.                 
 
    
 

- தொ. வி. 283. உரை.

 

  ‘வகுப்பின் ஈரெண் வண்ணச் செய்யுளுள்

     ஓங்கிய முப்பான் ஒலிஅந் தாதி.’                

 - பி. ம. 14

          ‘முறையில ஈரெண் கலையையும்

   முடியஓர் அடியதாய் இங்ஙனம் நாலடியின்

          முடிதல் எண்ணெண் கலையதாம்;

   அடிகள்பல சந்தமாய் வண்ணமும் கலைவைப்பும்

          அந்தாதி தவறாமலே

   அலகு முப்பதுசெய்யுள் பாடுவதும் சிறுபான்மை

          ஆகும்; எட்டுக்கலையெனும்

   தொடர்புறும்;அன்றி வெண்பா அகவலும் கலித்

          துறையான இம்மூன்றையும்

   சோர்வில்பப் பத்தாக அந்தாதி யாகவும்

          சொல்ஒலியல் அந்தாதியே.’                

 - பி. தீ. 18