192
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘பதினாறு கலைஓர் அடியாக வைத்து
பலசந்த மாக வணம்கலை வைப்பும்
வழுவாது அந்தாதித்து முப்பது செய்யுள்
பாடுவது; எட்டுக் கலையானும் வரப்பெறும்;
அன்றியும் வெண்பா
அகவல் கலித்துறை
பப்பத் தாக அந்தா தித்துப்
பாடு வதுமாம் ஒலியலந் தாதி.’
- மு. வீ. யா. ஒ. 121
64
இன்னிசை
825.
இறைவன் பெயர்ஊ ரினைஇன் னிசையான்
முறையின் தொண் ணூறு எழுபான் ஐம்பான்
அறையின் அப்பெயர் ஆகும் என்ப.
இது
பெயர் இன்னிசையும் ஊர் இன்னிசையும் ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: பாட்டுடைத்தலைவன் பெயரினையும் ஊரினையும்சார
இன்னிசை வெண்பாவால் தொண்ணூறு எழுபது ஐம்பது பாட்டின்
பெயர்
இன்னிசை வெண்பா என்றும் ஊர் இன்னிசை வெண்பா
என்றும்
வழங்கப்படும் என்றவாறு.
(65)
ஒத்த நூற்பாக்கள்
‘தொண்ணூ றேனும் எழுப தேனும்
இன்னிசைத் தொகுப்பின் இன்னிசைத் தொகையே.’
- பன். பாட். 288
‘எண்ணிய வகையான் இன்னிசை வெண்பாத்
தொண்ணூறு எழுபது தொடுப்பதுஅத் தொகையே.’
- பன். பாட். 289
|