பாட்டியல் - நூற்பா எண் 65, 66

 193


 

     ‘முதல்வன்ஊ ரின்பேரான் மொழிவன வெண்பா

     அதனைத்தொண் ணூறெழுபா னைம்பான் - மதர்விழியாய்!

     இன்னிசைவெண் பாவிற்கு மொக்கும் இயற்பெயர்

     அன்னவற்றால் கட்டுரைத்தார் ஆய்ந்து.’            

- வெண். பாட். 14

     ‘ஊர்பெயர்சார நேர்இன்னிசை வெண்பாத்

                         தொண்ணூறு ஏழ்ஐம்பான்.’   

- நவ. 10

     ‘நிலைப்பாட்டு டைத்தலைவன் நாமமது சாரஇன்

          னிசைவெள்ளை தொண்ணூ றேனும்

     சேர்ந்தஎழு பதேனும் அல்லது ஐம்பதேனும்

          சிறக்க உரைபெயர் இன்னிசையே;

     செம்பாட்டு டைத்தலைவன் உரைமுன் செய்யுள்தொகை

          செப்பல் ஊர்இன்னிசை யதே.’               

- பி. தீ. 22

     ‘பாட்டுடைத் தலைமகன் பெயரைச் சார

     இன்னிசை வெண்பா எழுபான் இருபஃது

     ஏனும் எழுபா னேனும் ஐம்பஃ

     தேனும் உரைப்பது பெயர்இன் னிசையே.’

 

                           - மு. வீ. யா. ஒ. 131; தொ. வி. 283. உரை.

     ‘பாட்டுடைத் தலைமகன் ஊரைச் சார

     இன்னிசை வெண்பா எழுபான் இருபஃ

     தேனும் எழுபா னேனும் ஐம்பஃ

     தேனும் இயல்புவது ஊர்இன் னிசையே.’

 

                          - மு. வீ. யா. ஒ. 132; தொ. வி. 283. உரை.

                                                                  65

 

                          வருக்கமாலை

 

826.    வருக்கத் தினைச்சொலல் வருக்க மாலை.

 

இது வருக்கமாலை ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: மொழிக்கு முதலாம் வருக்க எழுத்தினுக்கு ஒவ்வொரு கவி
கூறல் வருக்கமாலையாம் என்றவாறு.

25-26