194                      இலக

194

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

    கூறுதல் அவ்வெழுத்தை முதலாகக்கொண்டு கூறுதல் என்றவாறு. உயிரானும் க ச த ந ப ம வ என்னும் உயிரோடு கூடிய மெய் ஏழானுமாக எட்டு ஆசிரியப்பா வந்தால் அவை வருக்கமாலை எனவும் கூறுவாரும் உளர்.                                    

 (66)

 

                     ஒத்த நூற்பாக்கள்

 

     ‘மொழிக்குமுத லாகிய எழுத்துக் கெல்லாம்

     வருக்கம் உரைப்பது வருக்க மாலை.’        

- பன். பாட். 283

     ‘பன்அகவல் எட்டாய் வருக்கஎழுத் தான்வருமேல்

     முன் வருக்க மாலை மொழி.’              

- வெண். பாட். செ. 36

     மொழி முதலாம்

     வருக்க எழுத்திற்கு ஓர்தூக்கு வருக்கமாலைப் பெயரே.’

                                     - நவ.

     ‘வர்க்கஉயிர் கசதநப மவஎட்டின் சூழ்

          மருவு அகவல் வரின் வருக்கமாலை.’  

 - சித. பாட். 33

     ‘வருக்க மாலையாம் வருக்க எழுத்தென

      உயிரொடு கசதந பமவ எனஎண்

      வரிமுதல் வந்து வரும்எண் அகவலே.’       

தொ. வி. 267

    ‘மொழிமுதல் உயிர்மெய் வருக்கத்தொகை போற்றி

     அகவலால் புகல்வது வருக்க மாலை.’        

- பி. ம. 19

       ‘செப்பும் மொழிக்கு முதலாம்

    பெலம்மிகும் வருக்கத்து எழுத்திற்கு ஒவ்வோர்செய்யுள்

          பேசுவது வர்க்கமாலை.’              

- பி. தீ. 12

    ‘முதலாம் வருக்க எழுத்தினுக்கு ஒவ்வொரு

    செய்யுள் அணிபெறச் செப்புவது அதுதான்

    வருக்க மாலையாம் வழுத்துங் காலே.’       

- மு. வீ. யா. ஒ. 98

                                                       66