பாட்டியல்
- நூற்பா எண் 67 |
195 |
கைக்கிளை
827.
ஒருதலைக் காமம் ஓரைந்து விருத்தம்
கருத உரைத்தல் கைக்கிளை ஆகும்.
இது
கைக்கிளை ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: ஒருதலைக்காமத்தினை ஐந்து விருத்தத்தால்
பெறக்கூறுதல் கைக்கிளைச் செய்யுளாம் என்றவாறு.
(67)
ஒத்த நூற்பாக்கள்
‘இரங்க வருவது மயங்கிய ஒருதலை
இயைந்த நெறியது கைக்கிளை மாலை.’
- பன். பாட். 295
‘ஒருதலைக் காமம் உரைப்பவை யைந்தாய்
வருவிருத்தம் கைக்கிளையாம் மன்.’
- வெண். பாட். செ. 15
‘நண்பால் ஒருதலைக்காமம் நவின்ற விருத்தம்
ஐந்தால்
பெண்பால் வரின்அவை கைக்கிளையாம் என்றுபேசுவரே.’
- நவ. 41
‘வருங்காமம் ஒருதலை கைக்கிளைய தாம்.’
- சிதம்.
பாட். 36
'காமம் ஒருதலையது கைக்கிளை மாலை.’
- பி.
ம. 30
‘ஐவிருத்தம் வெள்ளைப் பாவினில் கைக்கிளைக்கு
இறை ஒருதலைக் காமமே.’
- பி. தீ. 20
‘ஐந்து விருத்தத் தாலே ஒருதலைக்
காமத் தைக்கூ றுவது கைக்கிளை.’
‘அன்றியும் வெண்பா ஆறைந் திரண்டு
பாடுவது அதன்பால் படும்என மொழிப.’
- மு. வீ. யா. ஒ. 148,
149; தொ. வி. 283 உரை.
67
|