196
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
மங்கல வள்ளை
828.
ஒன்பது வெண்பா வகுப்பால் உயர்குல
மங்கையைப் பாடுதல் மங்கல வள்ளை.
இது
மங்கலவள்ளை ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: உயர்குலத்து உதித்த மடவரலை வெண்பா ஒன்பதனான்
வகுப்புறப் பாடுதல் மங்கல வள்ளையாம் என்றவாறு.
(68)
ஒத்த நூற்பாக்கள்
‘சந்தமும் வெள்ளையும் தருவன கற்புடை
மங்கல வெள்ளை வருவன ஒன்பான்.’
- பன். பாட். 302
‘அதுவே,
வெண்கலி யானும்
வருதற்கும் உரித்தே.’
’’ 303
‘சந்தமும் வெள்ளையும் தனித்தனி புணர்த்தலும்
அந்தமில் புலவர் ஆம்என மொழிப.’
’’
304
‘மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்
இங்காம் ஒன்பான்என் றிசை.’
-
வெண். பாட். செ. 32
‘மாசில்குல மகளுக்கு வகுப்பு வெண்பா
வருபொருளொன் பான்ஒன்பா னாகப்பாடின்
தேசுயர்மங் கலவள்ளை.’
- சிதம். பாட்.
36
‘மாசில் குலமகளை வகுப்புவெண் பாவினால்
ஒருபொருள் உரைத்தலாய் ஒன்பது ஒன்பது
ஆகப் பாடின் மங்கல வள்ளை.’
- பி. ம. 27
‘உயர்குலப் பெண்ணினை
ஒன்பது வகுப்பின் வெண்பா ஒன்பது
செய்யுள் செய்வது மங்கல வள்ளை.’
-
பி. தீ. 26
|